2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கொழும்பு அல்-ஹிக்மா கல்லூரியின் வைர விழா அங்குரார்ப்பண நிகழ்வு

Kogilavani   / 2012 ஜனவரி 21 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு வாழைத்தோட்டம், அல்-ஹிக்மா கல்லூரியின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள வைர விழா அங்குரார்ப்பண நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

கல்லூரியின் அதிபர் கே.எம்.எம்.நாளிர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் மேல் மாகாண சபை, கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வினை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள மரதன் ஓட்டப்போட்டியும் நாளை காலை நடைபெறவுள்ளது.

இக்கல்லூரியின் வளாகத்திலிருந்து ஆரம்பமாகவுள்ள இந்த மரதன் ஓட்டப்போட்டியில் பாடசாலையின் பழைய மாணவர்கள், தற்போது கல்வி பயிலும் மாணவர்கள், அழைக்கப்பட்டவர்கள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதேவேளை வைர விழாவின் ஞாபகச் சின்னம் பொறிக்கப்பட்ட ரீசேட், சுவர் கடிகாரம், மேசை கடிகாரம், ஸ்டிகர்கள் மற்றும் பல ஞாபகச் சின்னங்களும் இதன்போது வெளியிடப்படவுள்ளன.

எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி கல்லூரியின் 60 ஆவது நிறைவு நாள் என்பதால் அதனை முன்னிட்டு  'வைரக் கணவுகள்' என்ற தொனிப் பொருளில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.


You May Also Like

  Comments - 0

  • Jawidh Ibrahim Saturday, 21 January 2012 09:18 PM

    மிகவும் நல்ல ஒரு விடயம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .