Super User / 2012 ஜனவரி 25 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(சுபுன் டயஸ்)
கொழும்பிலிருந்து கொட்டுகொட மற்றும் ஏக்கல பிரதேசங்களுக்கு பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் , ஒரு கையற்ற வான் சாரதியை கறுவாத் தோட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சாரதி இடது முழங்கையினாலேயே வாகனத்தை செலுத்துவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்
இவர்கள் போன்ற வாகன சாரதிகள் தொடர்பில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
30 வயது மேற்பட்டவர்களையே பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வான்;களின் சாரதியாக கடமையாற்ற வேண்டும் எனவும் குறித்த சாரதிகள் ஐந்து வருடத்திற்கு மேற்பட்ட சாரதி அனுமதி பத்திரத்தை கொண்டிருக்க வேண்டும் எனவும் பொலிஸ் முன்மொழிந்துள்ளது.
அத்துடன் நாடு முழுவதிலும் உள்ள சுமார் 1,200 பாடசாலை பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வான் சாரதிகளுக்கு சீருடை வழங்க வேண்டும் எனவும் பொலிஸ் பொலிஸ் முன்மொழிந்துள்ளது.
இதேவேளை, பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வான்;களை முறைப்படுத்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து ஆகிய அமைச்சுக்களுடன் இணைந்து செயற்படுகின்றது.
இந்நிலையில் 1 – 19 வயது பிரிவிலுள்ள 224 பாடசாலை மாணவர்கள் வாகன விபத்தினால் 2011ஆம் ஆண்டு மாத்திரம் உயிரிழந்துள்ளனர். மேற்குறித்த வயதெல்லையுடைய 4,133 சிறுவர்கள் வாகன விபத்தினால் கடந்த வருடம் காயப்பட்டுள்ளனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago