Super User / 2012 பெப்ரவரி 09 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டயரிடோ கயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இன்று வியாழக்கிழமை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இலங்கைக்கான விஜயம் மேற்கொண்டுள்ள உலக வங்கியின் நிதி மற்றும் அபிவிருத்தி சட்ட நிபுணர் நாகவல்லி அண்ணாமலையும் கலந்துகொண்ட இந்த சந்திப்பில் நீதி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
நீதி அமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வாவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பொது செயலாளரும், அக்கட்சியின் தமிழக தலைவருமான பேராசிரியர் காதர் முஹிதீன் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தூதுக்குழுவினைரை நேற்று புதன்கிழமை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸனலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
.jpg)
56 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
2 hours ago