Super User / 2012 பெப்ரவரி 12 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கே.என்.முனாஷா)
நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலையை உடனடியாக குறைக்குமாறு கோரி நீர்கொழும்பு மீனவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை வீதி மறியல் போராட்டத்திலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
நீர்கொழும்பு, குடாப்பாடு தேவாலயத்துக்கு முன்பாக இன்று பிற்பகல் ஆரம்பமான ஆர்ப்பாட்டமும் மறியல் போராட்டமும் தற்போது வரை தொடர்ந்து இடம்பெற்றுகொண்டிருக்கிறது.
இந்த போராட்டம் எரிபொருள் விலைகளை குறைக்கும் வரை தொடர்ந்து இடம்பெறும் எனவும் இன்றைய தினம் முதல் மீனவர்கள் கடலுக்கு செல்வதிலிருந்து விலகி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.
தமது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் நாடு தழுவிய ரீதியில் போராட்டம் இடம்பெறும் எனவும் மண்ணெண்ணை மற்றும் டீசல் விலை அதிகரிப்பினால் மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் குடாப்பாடு தேவாலயம் முன்பாக டயர்களை போட்டு எரித்ததுடன், வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது.
போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படாத வகையில் அர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு பொலிஸார் மீனவர்களிடம் கேட்டுக்கொண்ட போதும் மீனவர்கள் செவிசாய்க்கவில்லை.
.jpg)
.jpg)
49 minute ago
1 hours ago
2 hours ago
rifnas Monday, 13 February 2012 03:57 AM
இது தான் மஹிந்த சிந்தன அரசு. இல்லாத பொய்யல்லாம் சொல்லிகிட்டு வருவாங்க அடுத்த எலக்சனுக்கு.
Reply : 0 0
***மல்லிகை சிராஜ்***siro Monday, 13 February 2012 07:00 PM
ஆகட்டும் ஆகட்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
2 hours ago