Super User / 2012 பெப்ரவரி 29 , பி.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

மாலைத்தீவு அரசாங்கத்தில் இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை மற்றும் மனிதவள அமைச்சராக அண்மையில் பதவியேற்ற முஹம்மது ஹூசைன் ஷெரீப், தனது முதல் இராஜதந்திர நடவடிக்கையாக அண்மையில் இலங்கையில் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும சந்தித்தார்.
இச்சந்திப்பு கொழும்பு நாராஹேன்;பிட்டியில் அமைந்துள்ள இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது இலங்கையில் இளைஞர் விவகாரம் மற்றும் திறன்கள் அபிவிருத்தித்துறையில் கடந்த இரண்டு வருடங்களில் ஏற்பட்ட மிகப்பாரிய அபிவிருத்திகளையும் அதில் இலங்கையில் இளைஞர் விவகாரங்களை கட்டிஎழுப்புவதற்காக எடுக்கப்பட்டு விதிமுறைகளையும் மற்றும் செயலத்; திட்டங்களை மாலைத்தீவு இளைஞர் விவகார அமைச்சர் பாராட்டினார்.
இதைகுறித்து கருத்து பரிமாற்றம் மற்றும் மாலைத்தீவில் இளைஞர் விவகாரங்களை கட்டிஎழுப்புவதற்காக இலங்கையில் இளைஞர் விவகார அமைச்சின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் பெற்றுக்கொள்வது இச் சந்திப்பின் நோக்கமாக இருந்தன என்றும் முஹம்மது ஹூசைன் தெரிவித்தார்.
இலங்கையில் இளைஞர்களின் எதிர்காலத்தை கட்டிஎழுப்புவதற்காக ஜனாhதிபதி மஹிந்தராஜபக்ஷ, இளைஞர் விவகாரங்களுக்கு சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களை ஒன்றினைத்து இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சை உருவாக்கினார் என்றும் அவரின் ஆலோசனைகளுக்கு அமைய அனைத்து திட்டங்களையும் தயாரித்ததாகவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
பண்டைய வரலாற்றிலிருந்து இலங்கைக்கும் மாலைத்தீவுக்கும் இடையில் நற்புறவு இருந்ததென்றும் மாலைத்தீவு இளைமையைக் கட்டிஎழுப்புவதற்காக இலங்கை அரசாங்கத்தின் நிரந்தரமான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள மாலைத்தீவு அரசாங்கத்தின் தேசிய இளைஞர் வைபவத்தில் பிரதம அதிதியாக பங்குபற்றுமாறு இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் மாலைதீவு அமைச்சர் முஹம்மது ஹூசைன் தெரிவித்தார்.
இச் சந்திப்பில் மாலைத்தீவிற்கான இலங்கை அரசத் தூதுவர் ஹூசைன் சிஹாப், மாலைத்தீவு இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் முஹம்மது வஹீட் ஷெரீப் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago