Kogilavani / 2012 மார்ச் 02 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கே.என்.முனாஷா)
எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பு மற்றும் சிலாபத்தை சேர்ந்த மீனவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் தன்னை இனந்தெரியாத நபர்கள் சிலர் இரகசியமாக பின் தொடர்வதாகவும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமும் கத்தோலிக்க திருச்சபையும் பொறுப்பு கூற வேண்டும் என்று தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவரும் உலக மீனவ மக்கள் சம்மேளனத்தின் இலங்கைக்கான விசேட பிரதிநிதியுமான ஹேர்மன் குமார தெரிவித்தார்.
இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை நீர்;கொழும்பில் அமைந்துள்ள தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
மீனவர்கள் தொடர்பாக செயற்படும் அமைப்பு என்ற ரீதியில் நாட்டிலுள்ள மீனவர்களின் பிரச்சினைகளின் போது அவர்களின் உரிமைகளுக்காக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.
மீனவர்கள் மேற்கொண்ட போராட்டத்திற்கு நாங்கள் தலைமை தாங்கவில்லை. அது மீனவர்கள் சுயமாக மேற்கொண்ட போராட்டமாகும். மீன்பிடிதுறை அமைச்சர் ராஜித சேனாரத்ன அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அருண ரொசாந்தவும், ஹேர்மன் குமார என்ற டொலர் காக்கைகளே மீனவர்களின் ஆர்ப்பாட்டங்களின் பின்னால் இருந்து செயற்பட்டதாகவும் அவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து டொலர்கள் நேரடியாக கிடைப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் ரோம் நகரில் இடம்பெற்ற சர்வதேச விவசாய மாநாட்டில் பங்கு பற்றிவிட்டு பெப்ரவரி 24 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தை நான் வந்தடைந்தேன். இதன்போது விமான நிலையத்தில் வைத்து இனந் தெரியாத மூன்று நபர்களால் கண்காணிக்கப்பட்டதுடன், நான் வீடு திரும்பும் போது அவர்களால் பின் தொடரப்பட்டேன். பின்னர் நான் வீட்டுக்கு செல்லாமல் உறவினர் ஒருவருடைய வீட்டில் தங்கியிருக்க வேண்டி ஏற்பட்டது.
இந்நிலையில் என்னை பின் தொடர்ந்து வந்த வாகனம் எனது வீட்டருகில் சென்றுள்ளது. அயலவர்களிடம் அந்த வாகனத்தில் வந்தவர்கள் என்னைபற்றி விசாரித்துள்ளனர். நான் வங்கியில் கடனுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அது தொடர்பாகவே விசாரிக்க வந்துள்ளதாகவும் அவர்கள் அயலவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் கடந்த மாதம் நீர்கொழும்பில் இடம்பெற்ற சுதந்திரத்துக்கான அரங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் இது தொடர்பாக நான் கருத்து தெரிவித்திருந்தேன். அங்கு புலனாய்வு பிரிவினர் சமூகமளித்திருந்தனர். அந்த நிகழ்வின் பின்னரும் மோட்டார் சைக்கிளில் வந்த நபரால் நான் பின்தொடரப்பட்டேன். என்னை கொலை செய்வதற்கோ கடத்துவதற்கோ அல்லது வேறேதும் ஆபத்தை ஏற்படுத்துவதற்கோ சிலர் முயற்சி செய்கின்றனர்.
பொது மக்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்க வேண்டும். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமும், கத்தோலிக்க திருச்சபையும் பொறுப்பு கூற வேண்டும் என்றார்.
அகில இலங்கை ஐக்கிய மீனவ தொழிற்சங்கத்தின் முக்கியஸ்தர் அருண பிரசாந்த, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் நிர்வாக செயலாளர் கீதா லக்மினி, அருட்தந்தை சரத் குத்தமல்கொட, சட்டத்தரணி வின்சன்ட்புலத்சிங்கள, சுதந்திரத்திற்கான அரங்கம் அமைப்பின் முக்கியஸ்தர் பிரிட்டோ பெர்னாண்டோ, சிலாபத்தை சேர்ந்த மீனவ சங்கத்தின் தலைவர் லோயல் பீரிஸ் ஆகியோர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
10 minute ago
18 minute ago
23 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
23 minute ago
35 minute ago