2026 மார்ச் 19, வியாழக்கிழமை

தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாக்குமாறு பொதுபல சேன அமைப்பு கோரிக்கை

Super User   / 2012 நவம்பர் 29 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாக்குமாறு பொதுபல சேன அமைப்பினர் அரசாங்கத்திடம் இன்று வியாழக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசிய மரபுரிமைகள் அமைச்சர் மஹிந்த பாலசூரியவுடன் தொல்பொருள் திணைக்களத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் அடுத்த வருட ஜனவரி மாதத்திற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் என தேசிய மரபுரிமைகள் அமைச்சர் மஹிந்த பாலசூரிய இதன்போது பௌத்த தேரர்களின் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பில் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் கலாநிதி சேனரத் திசாநாயக்கவும் கலந்துகொண்டனார்.இதேவேளை, அம்பாறை – திருக்கோவிலுள்ள தொல்பொருள் பிரதேசத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் சுமார் ஏழு பேர் கடந்த ஞாயிறுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

இந்த புதையல் தோண்டல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுபல சேன அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.தேசிய நூதனசாலைக்கு முன்னாள் ஆரம்பமாகிய இந்த ஆர்ப்பாட்டத்தில் பௌத்த தேரர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தினை அடுத்தே தொல்பொருள் திணைக்களத்தில் தேசிய மரபுரிமைகள் அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் பொதுபல சேன அமைப்பினர் கலந்துகொண்டனர். (படங்கள்:பிரதீப் தில்ருக்ஷன)






  Comments - 0

  • Niyas Friday, 30 November 2012 03:31 AM

    வடக்கினைப் போல கிழக்கையும் ஆக்கிரமிக்க பேரினவாதிகள் முயலும் ஆரம்ப கட்டமே இந்த ஆர்ப்பாட்டம். நமது அரசியல்வாதிகள் கவனிக்க வேண்டியது இது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .