2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய கொழும்பு பழைய மாணவர் சங்கம் ஆரம்பம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 03 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளை அங்குரார்ப்பணம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கொழும்பு வெள்ளவத்தை தேசிய கலை இலக்கிய பேரவையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. கொழும்பு கிளைக்கான நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்ட அதேவேளை, இந்த கொழும்பு கிளையின் எதிர்கால திட்டங்கள், பாடசாலை அபிவிருத்திக்கு உதவுதல் போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டன. முக்கியமான விடயமாக சங்கத்தில் உறுப்பினர்களை இணைத்தல், பழைய மாணவர்களுக்கிடையில் தொடர்புகளை உருவாக்குதல் தொடர்பான நடவடிக்களை செய்தல், விரைவு படுத்தல் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டு அதற்கான தனிக் குழு உருவாக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் அமலன் கலந்து கொண்டதுடன், பாடசாலையின் முன்னாள் அதிபரும் கொழும்பு பம்பலபிட்டி இந்துக் கல்லூரியின் அதிருபருமான ராஜரத்தினமும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தெரிவு செய்யப்பட்ட நிர்வாக சபையின் விபரம்  

செயலாளர் - விமலச்சந்திரன்
தலைவர் - சுரேந்திரா
பொருளாளர் - சிவரூபன்
உப செயலாளர் - கெளசீகன்
உபதலைவர் - திருமதி மீனா சித்தார்த்தன்

நிர்வாக சபை உறுப்பினர்கள்

தவவேல்
சஞ்சையன்
பிரஜீத்
கிருசாந்தன்

போசகர்
அதிபர் ராஜரத்தினம்

இணைப்பு அணி
கிருசாந்தன் (பொறுப்பாளர்)
பிரசாந்தன்
தினேஷ்
சஞ்சையன்
கஜந்தன்

இச்சங்கத்தின் கொழும்பில் உள்ள பழைய மாணவர்களையும் இணைந்து கொள்ளவும் மேலதிக விபரங்களை அறிந்துகொள்ளவும் osavtmmv@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்புகொள்ளவும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .