2025 ஜூன் 23, திங்கட்கிழமை

முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் நவவி மீண்டும் இடமாற்றம்

Super User   / 2012 டிசெம்பர் 05 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி)

முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் வை.எல்.எம். நவவி (நளீமி) உயர் கல்வி அமைச்சிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளராக கடமையாற்றிய இவர், கடந்த நவம்பர் 8ஆம் திகதி வியாழக்கிழமை முதல் புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சிற்கு திடீரென இடமாற்றப்பட்டிருந்தார்.

எனினும் ஹஜ் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியின் தலையீட்டை அடுத்து நவவியின் இடமாற்றம் இரு நாட்களுக்குள் இரத்து செய்யப்பட்டது.

எனினும் தற்போது தனது சொந்த விருப்பதின் பேரிலேயே உயர் கல்வி அமைச்சிற்கு இடமாற்றம் பெற்று செல்வதாக அஷ்ஷெய்க் வை.எல்.எம்.நவவி தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

தனது கடமைகளை உயர் கல்வி அமைச்சில் அடுத்த வாரம் பொறுப்பேற்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அஷ்ஷெய்க் வை.எல்.எம்.நவவி முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் குருநாகல் மாவட்டத்தில் பிரதேச செயலாளராகவும், வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்காக அமைக்கப்பட்ட விசேட செயலணியின் பொறுப்பாளராகவும் கடமையாற்றினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .