2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

மஹரகமவில் பெண்ணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 22 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் ஒன்று வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. மஹரகம பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்திலிருந்தே இந்த சடலம் இன்று சனிக்கிழமைக் காலை மீட்கப்பட்டுள்ளது.

மஹரகம- பிலியந்தல லும்பினி ஒழுங்கையிலுள்ள வீடொன்றிலிருந்தே இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. 30 வயது மதிக்கத்தக்க பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்ட நிலையிலேயே இந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இப்பெண் தனது தாயாருடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ள நிலையிலே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்துடன் குறித்த பெண்ணின் கணவர் தொடர்புப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக தெரிவித்த பொலிஸார் சந்தேக நபர் தப்பிச்சென்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X