2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

சுவர்ணபுறவர விருது வழங்கும் விழா நாளை அலரி மாளிகையில்

Super User   / 2013 ஜனவரி 07 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் வருடந்தோறும் நடாத்தப்படும் சுவர்ணபுறவர விருது வழங்கும் வைபவமும் உள்ளூராட்சி தேசிய மாநாடும் வினைத்திறன் மிக்க உளளுராட்சி சேவைகளினுடாக சுபீட்சமானதோர் எதிர்காலம் எனும் தொணிப்பொருளில் நாளை செவ்வாய்க்கிழமை  அலறி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துசிறப்பிக்கவுள்ளார்.

இம்மாநாட்டில் இலங்கையில் சிறந்த மூன்று உள்ளுராட்சி சபைகளுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளதுடன் மூன்று சிறந்த திண்மக்கழிவு முகாமைத்துவத்தில ;ஈடுபட்ட உள்ளூராட்சி சபைகளுக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் உள்ளூராட்சி மாகாண சபைகள் பிரதி அமைச்சர் இன்திக பண்டாரநாயக்க, அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க பலர் கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X