2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மேர்வினின் மகன் சடலமாக மீட்பு

Super User   / 2013 ஜனவரி 07 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் ஜே. குரேயின் மகனான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுஜித குரே இன்று திங்கட்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

44 வயதான சுஜித குரே, வாதுவையிலுள்ள தனது வீட்டில் சடலமாக கிடந்துள்ள நிலையிலேயே பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்தொன்றில் சிக்குண்ட நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் கடந்த சில நாட்களாகவே சுகவீனமுற்று இருந்துள்ளார் எனவும் தீ விபத்துக்கான காரணம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X