2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

பியகம குடும்ப நல சுகாதார உத்தியோகஸ்தர்களின் ஆர்ப்பாட்டம்

Super User   / 2013 ஜனவரி 21 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.எம்.பௌஸான்


முறையற்ற இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பியகம குடும்ப நல சுகாதார உத்தியோகஸ்தர்களின் ஆர்ப்பாட்டமொன்று இன்று திங்கட்கிழமை பியகம சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு முன்னால் நடைபெற்றது.

இதன்போது சேவை அடிப்படையில் தமக்கு முறையான இடமாற்றம் வழங்குமாறு கோரியும் முறையற்ற விதத்தில் வழங்கப்படுகின்ற இடமாற்றங்களை உடனடியாக நிறுத்த கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் தெரிவித்தனர்.

இது தொடர்பில் அகில இலங்கை அரசாங்க குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர் சங்க பிரதிச் செயலாளர் தேவிகா கொடிதுவுக்கு மேல்மாகாண சுகாதார அமைச்சர் ஜகத் அங்ககேயின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இது தொடர்பில் ஒரு வாரத்திற்குள் விசாரணை செய்து தீர்வைப் பெற்றுத் தருவதாக அமைச்சர் கூறியதை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X