2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

மீனவர்களுக்கான படகோட்டப் போட்டி

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 11 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.என்.முனாஷா


மீனவர்களுக்கான படகோட்டப் போட்டி நீர்கொழும்பு, குடாப்பாடு கடற்பகுதியில் இரு நாட்களாக நடைபெற்றன.

நீர்கொழும்பு குடாப்பாடு ஜெப பாலமாதா இளைஞர் அமைப்பு, கடற்கரைத்தெரு  பங்குப்பிரிவு குடாப்பாடு சுற்றுலாத்துறை ஹோட்டல் சங்கத்தினருடன் இணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமையும் இன்று திங்கட்கிழமையும் இப்போட்டியை நடத்தின.

கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்ட மீனவர்களுக்கு இடையில் நடைபெற்ற இறுதிச்சுற்று படகோட்டிப் போட்டியில் டில்சான் ரொட்ரிகோ, ஜே.ஜோகா டிமோ, டெரன்ஸ் குமார பீரிஸ் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை பெற்றனர்.

இப்போட்டியில் முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு மூன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான 25 குதிரைவலுக் கொண்ட படகு இயந்திரம்,  ஒன்றரை இலட்;சம் ரூபா பெறுமதியான மீன்பிடிப்படகு, ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள் என்பன வழங்கப்பட்டன.  மேலும் இறுதிப் போட்டியில் பங்குபற்றியவர்களுக்கு ஆறுதல் பரிசுகளாக செட்லைட் மற்றும் இயந்திரக் காற்றாடி என்பனவும் வழங்கப்பட்டன.

இதன் ஆரம்ப நிகழ்வில் மீன்பிடித்துறை பிரதியமைச்சர் சரத்குமார குணரட்ன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X