2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

அபிவிருத்தி உதவியாளர்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சில் செயலமர்வு

Super User   / 2013 பெப்ரவரி 13 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


மீள்குடியேற்ற அமைச்சினால் மாவட்ட செயலகங்களில் நியமிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உதவியாளர்களுக்கான விசேட செயலமர்வு இன்று புதன்கிழமை அமைச்சில் இடம்பெற்றது.

மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாஸ தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள், எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அது தொடர்பான நிகழ்ச்சித் திட்ட முன்னேற்றம் தொடர்பாக இச்செயலமர்வில் விரிவாக ஆராயப்பட்டது.

மீள்குடியேற்ற வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற மாவட்டங்களில் பணியாற்றுகின்ற அபிவிருத்தி உதவியாளர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை இதன்போது அமைச்சின் செயலாளர் வலியுறுத்திக் கூறினார்.

அமைச்சினால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற மற்றும் எதிர்காலத்தில் செயற்படுத்தப்பட இருக்கின்ற கருத்திட்டங்கள் அவை தொடர்பான நோக்கங்கள் தொடர்பாகவும் இங்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மேலதிக செயலாளர் எம்.எம். நயீமுதீன், சிரேஷ்ட உதவிச் செயலாளர் தவஈஸ்வரி உட்பட பலர் கலந்துகொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X