2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

பாடசாலை கிரிக்கெட் போட்டிகளின் போது காடைத்தனத்தை கையாள நடவடிக்கை

Super User   / 2013 மார்ச் 04 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுபுன் டயஸ்

ஆனந்தா மற்றும் நாலந்தா ஆகிய பாடசாலைகளுக்கு இடையில் வார இறுதியில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின் இறுதி மணித்தியாலத்தில் இடம்பெற்ற அசிங்கமான மோதலை தொடர்ந்து பெரிய கிரிக்கெட் போட்டி காடைத்தனத்தை உடனடியாக கையாள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள றோயல் மற்றும் சென். தோமஸ் கிரிக்கெட் போட்டியுடன் கிரிக்கெட் பருவ காலம் முடிவடையவுள்ளது.

கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்போது வாகனங்களில் கட்டுப்பாடின்றி பயணித்தல், வன்முறையில் ஈடுபடல், பெண்கள், பெண் பிள்ளைகள் மீது கெட்ட வார்த்தை பிரயோகம் மற்றும் மது அருந்துதல் ஆகிய துர்நடத்தைகளில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்காக சாதாரன உடையிலும் சீருடையிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளனர்.

மாணவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்களின் அந்தஸ்து அல்லது பாடசாலையின் கௌரவம் என்பவை கவனத்தில் கொள்ளப்படாது சட்டத்தின் முன் நிறுத்தப்படுவாரென பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் 40 மாணவர்கள் மியூசியஸ் கல்லூரி மற்றும் கொழும்பு சர்வதேச பாடசாலை ஆகியவற்றின் மதில் மேலாக இன்று பாய முற்பட்டபோது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கறுவாத் தோட்ட பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு எச்சரிக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X