2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

ஒரு கோடி பெறுமதியான கஜ முத்துக்களுடன் மூவர் கைது

Menaka Mookandi   / 2013 மார்ச் 29 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.சாஜஹான்


ஒரு கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியான உடையதென மதிப்பிடப்பட்டுள்ள 30 கஜமுத்துக்களுடன் இராணுவம் மற்றும் பொலிஸார் அதிகாரிகள் இருவர் உட்பட மூவரை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து நீர்கொழும்பு, குரணை பிரதேசத்தில் ரயில் நிலையம் அருகில் வீதியில் வைத்து சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 30 கஜமுத்துக்களையும் இராணுவ கேணல் ஒருவர் பயன்படுத்தும் கார் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்கள் 30 கஜமுத்துக்களையும் 35 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்வதற்காக இராணுவ வாகனத்தில் வந்த போதே பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த லியனகே, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆனந்த அல்விஸ் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி அல்லவவின் உத்தரவின் பேரில், நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் நுவன் தாரக்க தலைமையிலான குழுவினர் சந்தேக நபர்களை கைது செய்ததுடன் கஜமுத்துக்களையும் வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .