2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

திருட்டுப் பொருட்களுடன் 'நாகயா' கைது

Kanagaraj   / 2013 ஏப்ரல் 21 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


- கே. என்.முனாஷா


15 இலட்சம் ரூபா பெறுமதியான திருட்டுப் பொருட்களுடன் 'நாகயா' என அழைக்கப்படும் பிரபல திருடனை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு குற்றத் தடுப்புப்  பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு தலாகேன பிரதேசத்தைச் சேர்ந்த சந்தன நாகபோதி (23 வயது) என்பவரே இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

சந்தேக நபரிடமிருந்து மடிக் கணினிகள், டிஜிட்டல் கமரா, கையடக்க தொலைபேசிகள் மற்றும் நகைகள் என்பற்றை கைப்பறியதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் போதைப் பொருளுக்கு அடிமையானவர் எனவும், விரைவில் திருமணம் செய்ய இருந்தவர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபர் நீர்கொழும்பு மற்றும் நகரை அண்டிய பிரதேசங்களில் உள்ள வீடுகளிலேயே பெறுமதியான பொருட்களை திருடியுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.    
                             
குற்றத்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சந்தேக நபரை கைது செய்ததாகவும் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X