2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நான் பணியாற்றிய மோசமான பிரதேசம் நீர்கொழும்பாகும்: உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்

Super User   / 2013 மே 01 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்       

தனது 37 வருட கால பொலிஸ் சேவையில் தான் பணியாற்றிய மோசமான பிரதேசம் நீர்கொழும்பு ஆகும் என பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆனந்த அல்விஸ் தெரிவித்தார்.

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற சிவில் பாதுகாப்பு குழுவினருக்கான கூட்டத்தில் கலந்துகொணடு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பட்டார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றகையில்,

"நீர்கொழும்பில் குறிப்பிட்ட ஒரு குழுவினர் தமது சுய நலனுக்காக தமது பிரதேசத்தில் முறையற்ற விதத்தில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு  வருகின்றனர். இதன் காரணமாக பொலிஸாருக்கு தமது கடமையை சரிவர மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆயினும் தற்போது நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது" என்றார்.

இந்த நிகழ்வில் நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி அல்லவ, மதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X