2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

மின் கட்டண உயர்வை கண்டித்து எதிர்ப்பு நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 மே 09 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.சாஜஹான்


அதிகரிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டணத்திற்கு நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் (ஐக்கிய தேசிய கட்சி) எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மாநகர சபையின் மே மாத அமர்வு இன்று வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவிருந்தது. இந்த நிலையில், மாநகர சபையின் வாயிலில் இவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கறுப்பு நிற உடையில் இவர்கள் அதிகரிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டணத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு  மாநகர சபை மண்டபம் வரை வந்தனர்.

இதன்போது அவர்கள் தீப்பந்தத்தையும் எதிர்ப்பு சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் பின்னர் அவர்கள் மாநகர சபையின் அமர்வில் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X