2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

மோசடியில் ஈடுபட்டவர் மீது தாக்குதல்

Kanagaraj   / 2013 மே 16 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்       
 
வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காக அனுப்புவதாக கூறி பலரிடம் இலட்சக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்த நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சீதுவையை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலட்சக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்த குறித்த நபர் தலைமறைவாகி இருந்த நிலையிலேயே  பணத்தை கொடுத்து ஏமாற்றமடைந்த பாதிக்கப்பட்ட சிலரே இவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு இலக்கான குறித்த நபர் படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்று முன்தினம் புதன் கிழமை அனுமதிக்கப்பட்டார்.

குறித்த நபர் மீது சீதவை பிரதேசத்தில் வைத்து கடுமையாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், வெளிநாடு செல்வதற்காக குறித்த நபரிடம் பணத்தை கொடுத்து ஏமாற்றமடைந்தவர்கள் தத்தமது பிரதேச பொலிஸ் நிலையங்களில் குறித்த நபர் தொடர்பாக முறைப்பாடுகளை செய்து வருவதாக தெரியவருகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X