2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பு களப்பில் கொட்டப்பட்ட பல ஆயிரம் கிலோ கிராம் மீன்கள்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 22 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.இஸட்.ஷாஜஹான்       


நீர்கொழும்பு களப்பில் ஆயிரம் கிலோகிராம் சால மீன்கள் நேற்று புதன்கிழமை கொட்டபட்டன.

சால மீன்கள் அதிகளவு பிடிக்கப்பட்டமை சந்தையில் ஒருகிலோகிராம் சால மீன் 5 ரூபாயிற்கு விலைபோனமை போன்ற காரணங்களினால் இவ்வாறு மீன்கள் களப்பி;ல் கொட்டப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு குட்டி தூவ மற்றும் புதிய நீதிமன்ற கட்டடிடத் தொகுதி வரையான பிரதேசங்களிலிருந்து 500-700 வரையான மீன்பிடிப் படகுகள் கடலுக்கு செல்வதாகவும், ஒரு படகில் 1500 கிலோகிராம் வரையான மீன்களை கொண்டு செல்ல முடியும் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

இது போன்று சிறிய ரக மீன்கள் அதிகளவில் பிடிக்கப்படும் போது அவற்றை பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்கக் கூடிய வசதிகளோ, அவற்றை உரம் போன்றவையாக மீள் உற்பத்தி செய்யும் திட்டங்களோ இல்லை என மீனவர்கள் கவலை  தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X