2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

மனைவி கொலை; கணவனுக்கு பிணை

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 26 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

தனது மனைவியை வீதியில் வைத்து வெட்டியும் குத்தியும் படுகொலை செய்த சம்பவத்தின் பேரில் சந்தேகத்தின் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபரான அந்த பெண்ணின் கணவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ.கபூரே இன்று திங்கட்கிழமை அவருக்கு பிணை வழங்கியுள்ளார்.

ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப்  பிணைகளிலும் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

குடும்பப் பிரச்சினை காரணமாக தனது மனைவியை வீதியில் வைத்து வெட்டியும் குத்தியும் படுகொலை செய்த சந்தேகநபரே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வெலிஹேன – கொச்சிக்கடை பிரதேசத்தை சேர்ந்த முகம்மத் பியாஸ் என்ற 31 வயது நபரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வெலிஹேன –கொச்சிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த ஆராச்சிலாகே ரோகினி துசார என்ற பெண்ணே 2013 ஆம் ஆண்டு ஜனவர் 30 ஆம் திகதி வெலிஹேன மாஹிம் வீதியில் வைத்து சந்தேக நபரினால் கொலை செய்யப்பட்டவராவார்.

தனது மனைவியை கொலை செய்த சந்தேக நபர் கொலைக்கு பயன்படுத்திய கூரிய ஆயுதத்துடன் கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X