2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தின நிகழ்வு

Super User   / 2013 நவம்பர் 28 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


பலஸ்தீனத்தின் ஒருமைப்பாட்டு தின நிகழ்வு நேற்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இலங்கை பலஸ்தீன் ஒருமைப்பாட்டு சங்கத்தின் ஏற்பாட்டிலான இந்த நிகழ்வு கொழும்பு – 07,  விஜயராமயிலுள்ள உள்ள ஹெக்டர் கோப்பேகடுவ நிலையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் இராஜதந்திரியும் சமூக ஆய்வளருமான கலாநிதி தயான் ஜயதிலக சிறப்பு உரையாற்றினார். சிரேஷ்ட அமைச்சர் கலாநிதி திஸ்ஸ விதாரன மற்றும் இலங்கைக்கான பஸ்தீன் தூதுவர் கலாநிதி அன்வர் அல் அஹா, வெளிநாட்டு தூதுவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது பலஸ்தீனத்தில் இஸ்ரேலியர்களினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களை வெளிக்காட்டும் புகைப்பட கண்காட்சியும் இடம்பெற்றது. (படங்கள்: அஷ்ரப் ஏ சமத், வருண வன்னியாராச்சி)














  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X