2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

மீனவர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவி

Kanagaraj   / 2014 ஜனவரி 04 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட். ஷாஜஹான்

மேல் மாகாண பெருந்தெருக்கள் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் நிமல்லான்ஸாவின் நிதி ஒதுக்கீட்டில் குறைந்த வருமானம் கொண்ட பத்தாயிரம் மீனவ குடும்பங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ்  75 இலட்சம் ரூபா செலவில்  உதவிகள் வழங்கும் நிகழ்வு நீர்கொழும்பு கடற்கரைத் தெரு மைதானத்தில் இடம்பெற்றது.

இத்திட்டத்தின்  கீழ் நீர்கொழும்பைச் சேர்ந்த இரண்டாயிம் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், பெண்களுக்கு சுய தொழிலில் ஈடுபடுவதற்கான உபகரணங்களும், மீனவர்களுக்கு படகு இன்ஜின்களும் வழங்கப்பட்டன.
நிகழ்வில் அமைச்சர் நிமல்லான்ஸா, நீர்கொழும்பு மேயர் அன்ரனி ஜயவீர, பிரதி மேயர் எம்.எஸ்.எம்.சகாவுல்லாஹ் ஆகியோர் படகு இன்ஜின் ஒன்றை மீனவருக்கு வழங்குகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X