2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

இலங்கை - ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக சம்பாஷணை ஊடாக இலங்கைக்கு பாரிய நன்மை

Kanagaraj   / 2014 மே 08 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையின் நம்பிக்கைக்குரிய ஒரு சந்தை மட்டுமல்லாது, இலங்கை பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி வளர்ச்சிகளுக்கான ஒரு பங்குதாரராக இருக்கின்றது  என  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன், கலதாரி ஹோட்டலில் உத்தியோக பூர்வமாக  ஆரம்பித்து வைக்கப்பட்ட இலங்கை- ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக சம்பாஷணையின் இரண்டாவது தொடர் வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் புதன்கிழமை (07) தெரிவித்தார்.
 
முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் எம். பைசர் முஸ்தபா,  இலங்கை,மாலைத்தீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின்  தூதுவர் டேவிட் டேலி, இலங்கைக்கான ஐரோப்பிய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் திலிபன் தியாகராஜா ;,இயக்குநர் சைமன் பெல், இராஜதந்திர பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் இவ் வர்த்தக சம்பாஷணை வைபவத்தில் கலந்துக்கொண்டனர்

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரிஷாத்

இலங்கை - ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக சம்பாஷணையின் ஊடாக எடுக்கப்படும் முயற்சிகள் குறிப்பிட்ட உணவு , பானங்கள், மின்னணுவியல், நவரத்தினங்கள்,   நகைகள் , இறப்பர் மற்றும் பிளாஸ்டிக்குகள் போன்ற பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தை திறனை அடையாளம் காண உதவுவதோடு வர்த்தக ஒத்துழைப்புக்கான பரஸ்பர நன்மைகளை நிலைநாட்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

 இலங்கை சர்வதேச வர்த்தகத்திற்கான சூழலால் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கு சமுகமளித்திருக்கும் தனியார் துறை பிரதிநிதிகள் ஆகிய நீங்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தூர நோக்கின் கீழ்,  இலங்கை ஆசியாவின் வர்த்தக மையமாக இருக்கின்ற  செய்தியை உலகம் முழுவதும் அறிவித்து இலங்கையினை ஊக்குவிக்க வேண்டும்.

இலங்கை- ஐரோப்பிய ஒன்றிய அபிவிருத்தி திட்டத்தினூடாக அபிவிருத்தி உதவிகள், சுனாமிக்கு பின்னரான  புனரமைப்பு மற்றும் புனர்வாழ்வு, மனிதாபிமான உதவிகள் மேலும் பல்வேறு திட்டங்கள் உட்பட குறிப்பிடத்தக்க  வகையில் உதவிகள் வழங்கப்பட்டன.
 
ஐரோப்பிய ஒன்றியம் எமது முதலாவது உலக வர்த்தக பங்காளி.எங்கள் இருதரப்பு வர்த்தக தொகுதிகள் தொடர்ச்சியான வளர்ச்சியை காட்டுகின்றது. எமது இருதரப்பு வர்த்தக தொகுதிகளில் சிறந்த வர்த்தக நிலைகளை காண விரும்புகின்றேன். அதுமட்டுமல்ல ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் தொடர்ச்சியான ஆதரவு இலங்கையின் பல்வேறுபட்ட அபிவிருத்தி முயற்சிகளுக்கு உந்துசக்தியாக   இருக்கின்றது 
 
இலங்கை வர்த்தக திணைக்களத்தின் அறிக்கையின்படி, இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் வர்த்தக சமநிலை கடந்த 9 வருடங்களாக சாதகமாக இருந்து வருகின்றது.
 
28 நாடுகளினை கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், ஏற்றுமதி இலக்கினை கொண்ட இலங்கை தயாரிப்புகளுக்கான சந்தையில் முதலிடத்தில் இருக்;கின்றது.
 
2013 ஆம் ஆண்டில், இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான மொத்த இருதரப்பு வர்த்தகம் 4.9 பில்லியன் அமெரிக்க டொலாராக காணப்பட்ட நிலையில் ஐரோப்பிய சந்தையில், இலங்கையின் மொத்த ஏற்றுமதியானது 2009 ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆம் ஆண்டு  வரையிலான  நான்கு ஆண்டுகளில்  2.07 (2009) பில்லியன் அமெரிக்க  டொலரிலிருந்து, 3.27 (2013) பில்லியன அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
 
ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கையின் முக்கிய ஏற்றுமதி பொருட்களாக ஆடை, வைரம், தேயிலை மற்றும் இறப்பர் தயாரிப்புகள் காணப்படுகின்றன.
 
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்றுமதித் துறை 17 சதவீதம்  பங்களிப்பு செய்கிறது. எனினும், இந்த துறை எமக்கு இன்னும் சவாலாகவேயுள்ளது. எனவே இப்போது நமது நடைமுறையில் உள்ள  தற்போதைய சந்தை வாய்ப்புக்களையும் மற்றும் தயாரிப்புக்களையும் அதிகரிப்பதற்கான நேரம் நெருங்கியுள்ளது.
54 சதவீதமான நமது ஏற்றுமதிகள்  சந்தைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின்  கவனத்தை அதிகமாக  ஈர்த்துள்ளன.  .
 
இலங்கைக்கும்;, ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையேயுள்ள உறவானது இருதரப்பு வர்த்தகத்தின் அளவினை 5 பில்லியன் அமெரிக்க டொலருக்கு முன்னோக்கி இட்டுச்சென்றுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டுவரும் தற்போதைய உதவிகளுக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன.; அத்துடன் நாங்கள் சிறந்த வர்த்தக அளவினை பேணுவதற்கும் எதிர்பார்க்கின்றோம் எனவும்   அமைச்சர் ரிஷாத் ;பதியுதீன் தெரிவித்தார்.
 
இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குமிடையில் 1975 ஆம் ஆண்டில், கூட்டு வர்த்தக தொழில் ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்ட பின்னர் அது 1995 ஆம் ஆண்டு கூட்டுபங்குதாரர் மற்றும் மேம்பாட்டுக்கான வர்த்தக தொழில் ஒத்துழைப்பு ஒப்பந்தமாக மாற்றப்பட்டது. அனைதொடர்ந்து  இலங்கை - ஐரோப்பிய ஒன்றிய கூட்டு ஆணைக்குழுவும் வெற்றிகரமாக நடைமுறைக்கு வருந்தது.
 
 
நிகழ்வில் உரையாற்றிய ஐரோப்பிய வர்த்தக சம்மேளனத்தின் இயக்குநர் சைமன் பெல் இலங்கையின் ஏற்றுமதி மதிப்பு குறிப்பிடத்தக்க  வளர்சியினை ஈட்டி பாரிய வெற்றயினை கண்டுள்ளது. பெரும்பாலும் அமெரிக்க, ஐரோப்பிய  உத்தியோகபூர்வ அதிகாரிகள் இவ்வெற்றி; குறித்து தெரியாமல் இருந்துள்ளனர் . உண்மையில், இலங்கையின் ஏற்றுமதி மதிப்புக்கான  வெற்றி கூடுதலாக வாசனைத் திரவியங்கள், இறப்பர், தேயிலை, இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் ஆகியவற்றில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளது. இலங்கையின் இவ்வெற்றி இலக்ககினை ருவாண்டா இந்தோனேஷியா போன்ற  நாடுகள் முன்மாதிரியாக கொண்டுள்ளமை  ஒரு  அறியப்பட்ட உண்மையாகும் என கூறினார்.
 
இந்நிகழ்வில் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர், எம். பைசர் முஸ்தபா,  இலங்கை-மாலத்தீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின்  தூதுவர் டேவிட் டேலி ஆகியோரும் உரையாற்றினர்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X