2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

ஹொரண கைத்தொழிற்பேட்டை தொடர்பில் டக்ளஸ் நேரில் ஆராய்வு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 30 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஹொரண கைத்தொழில் அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான ஹொரண கைத்தொழிற்பேட்டையின் தொழிற்துறை நடவடிக்கைகள் தொடர்பில், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் விஜயம் மேற்கொண்டு ஆராய்ந்தறிந்து கொண்டார்.

களுத்துறை மாவட்டத்தின் ஹொரண பகுதியில் அமைந்துள்ள கைத்தொழிற்பேட்டைக்கு அமைச்சர் இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது கைத்தொழிற்பேட்டையின் அமைவிடம் தொடர்பாக அமைச்சர் கவனம் செலுத்திக் கேட்டறிந்து கொண்டார்.

இதனிடையே தொழிற்பேட்டையின் தொழிற்துறை நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்த அமைச்சர், தொழிற்துறைகளை மேலும் விரிவாக்கம் செய்து மேம்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தினார்.

அத்துடன், குறித்த கைத்தொழிற்பேட்டை எதிர்நோக்கும் ஏனைய பிரச்சினைகள், இடர்பாடுகள் தொடர்பில் தாம் ஆராய்ந்;து அறிந்து கொள்ளும் அதேவேளை, துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி உரிய தீர்வினைப் பெற்றுத் தருவதாகவும் தெரிவித்தார்.

இதன்போது, கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் பணிப்பாளர் ஆரியசிங்க உடனிருந்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X