2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

இடுப்புப்பட்டியில் தங்கம்: ஒருவர் கைது

Thipaan   / 2014 ஒக்டோபர் 30 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

ஒரு கோடி ரூபா பெறுமதியான இரண்டு கிலோகிராம் நிறைகொண்ட 20 தங்கக் கட்டிகளை, இடுப்புப் பட்டியில் மறைத்து கடத்த முயன்ற ஒருவரை கைது செய்துள்ளதாக, கட்டுநாயக்க விமான நிலைய போதைப் பொருள் ஒழிப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று  காலை 7.30 மணியளவில் டுபாயிலிருந்து இலங்கை வந்த யு.எல் 226 விமானத்தில் பயணித்த பயணியிடமிருந்தே இரண்டு கிலோகிராம் நிறை கொண்ட தங்கக் கட்டிகள் 20 கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பைச் சேல்ந்த முஹம்மத் கபீர் முஹம்மத் சமீர் என்பவரே கைது செய்ப்பட்டவராவார்.

போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்,  சந்தேக நபரை சோதனை செய்த போது அவர் அணிந்திருந்த இடுப்புப் பட்டியில் (பெல்ட்) சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலைய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர்களான  ருவன் குமார, ஜயரத்ன, பொலிஸ் சாஜன்ட திசாநாயக்க மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்களைக் கொண்ட குழுவினரே சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

குறித்த நபரை சுங்கத்திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X