Kogilavani / 2015 ஜனவரி 21 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.ஷங்கீதன்
'கடந்த காலங்களில் ஊழல்கள் நிறைந்த அமைச்சாக கல்வி அமைச்சு காணப்பட்டது. பல்வேறு பிரச்சினைகள் இவ் அமைச்சில் காணப்பட்டன. அவை அனைத்துக்கும் முற்றுபுள்ளி வைத்து ஒரு சிறந்த அமைச்சாக இதனை மாற்ற வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். அதற்காக நாங்கள், திறமையான குழுவை அமைத்துள்ளோம்' என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் கேட்போர் கூட மண்டபத்தில் நேற்ற நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டும் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'சில பட்டதாரிகளுக்கு அவர்களுடைய பாடங்களிலே தெளிவில்லாத நிலை காணப்படுகின்றது. நாம் இன்னும் அதிகமாக படிக்க வேண்டும். இல்லாவிட்டால் எமது அறிவை வளர்த்துக் கொள்ள முடியாத ஒரு நிலை ஏற்படும். எமக்கு கையளிக்கப்பட்டுள்ள இந்த அமைச்சு மிகவும் கஷ்டமான ஒரு அமைச்சாகும். இதில் பலதரப்பட்டவர்களும் சம்பந்தப்பட்டுள்ளார்கள்.
பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிக்கின்ற பொழுது அரசியல் இல்லாமல் சுதந்திரமாக செயற்பட வேண்டும்' என நான் எதிர்பார்க்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .