Kanagaraj / 2015 மே 15 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பின் 20ஆம் திருத்தம் என்றால் என்ன? இது நமக்கு நன்மையையா, தீமையையா கொண்டு வரப்போகின்றது? என்ற கேள்விகளுக்கு எளிமையான விளக்கங்களை, தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்டுள்ள சட்ட நகலை தயாரித்த விற்பன்னர்கள் வழங்கவுள்ளார்கள்.
இது தொடர்பான எளிமையான விளக்க உரைகள் அடங்கிய பகிரங்க கலந்துரையாடல் எதிர்வரும் சனிக்கிழமை 16ஆம் திகதி முற்பகல் 10.15 மணி முதல் பம்பலப்பிட்டி மாணிக்க விநாயகர் ஆலயத்துக்கு எதிரில் லோரன்ஸ் வீதி, இலக்கம் 8ல் அமைந்துள்ள ஏவிஎஸ் மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட செயற்குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட ஜனநாயக தேர்தல் முறை தொடர்பிலான இந்நிகழ்வை ஜ.ம.மு தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன் தலைமையேற்று நடத்த, தேர்தல் முறை திருத்த சட்டமூலத்தை தயாரிப்பதில் முக்கிய பங்களித்து வரும் அசோகா அபேகுணவர்தன, கீர்த்தி தென்னகோன் ஆகியோர் விளக்க உரைகளை நிகழ்த்துவர்.
இந்த உரைகளுக்கு அவசியமான தமிழ் மொழிபெயர்ப்புகளும் வழங்கப்படும். தேர்தல்முறை மாற்றம் தொடர்பில் ஜ.ம.மு உட்பட்ட கூட்டணி கட்சிகள் தயாரித்து அளித்துள்ள திருத்த ஆலோசனைகள் பற்றியும் இந்நிகழ்வில் ஆராயப்படவுள்ளது.
சமூக முன்னோடிகள், ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள், வர்த்தகர்கள் என அனைத்து பிரிவினரும் கலந்துக்கொண்டு நாடு முழுக்க இன்று பரபரப்பாக பேசப்படும் உத்தேச தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் அறிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை முறையாக பயன்படுத்திக்கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைப்பதாக ஜ.ம.மு ஊடக செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
5 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago
2 hours ago