Menaka Mookandi / 2015 ஜூன் 07 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
'எப்படியாவது எனது குரலை நசுக்கி, என்னையும் எனது சமூகத்தையும் அழிக்க இனவாதிகள் கங்கணம்கட்டி நிற்கின்றார்கள் என வாணிபத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் போரத்தின் ஏற்பாட்டில், 'வில்பத்து காடழிப்பு விவகாரமும் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்களும்' என்ற தொனிப்பொருளில் கொழும்பு அஞ்சல் தலைமையக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'ஏனைய சமூகங்களுக்கு உதவி செய்ய முடிந்த என்னால், அகதிகளாக வெளியேற்றப்பட்ட எனது சொந்த சமூகத்துக்கு உதவ முடியாமல் போய்விட்டது' என்றார்.
'வடபுலத்திலிருந்து வெறுங்கையோடு வெளியேற்றப்பட்ட 30 ஆயிரம் குடும்பங்களில் ஒரு குடும்பத்திற்கேனும் ஒரு தகரக்கொட்டிலையும் கடந்த அரசினாலும் இந்த அரசினாலும் செய்துதர முடியவில்லை என்பதுதான் துயரம் நிறைந்த நிலையாக உள்ளது.
கடந்த கால யுத்தத்தின்போது மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இனச் சுத்திகரிப்புச் செய்யப்பட்டு வெறுங்கையோடு வெளியேற்றப்பட்ட சமூகம், கால் நூற்றாண்டுகள் கடந்த நிலையிலும் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. அரசு, தமிழீழ விடுதலைப் புலிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், இராணுவம், அரசாங்க அதிகாரிகள், ஐக்கிய நாடுகள் சபை, இந்திய அரசாங்கம் என்பன முஸ்லிம்களை திட்டமிட்டே புறக்கணித்து வந்துள்ளன' என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரில், பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் பற்றிய சில விடயங்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தும் அதனைக்கூட இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சொந்தமான முள்ளிக்குளம் என்ற கிராமத்தின் 1,500 ஏக்கர் காணி இராணுவ முகாமாக அபகரிக்கப்பட்டிருக்கின்றது. மிதிவெடி அகற்றுவதில் தொடங்கி பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஒரு ஓலைக்கொட்டில் அமைப்பது வரை முஸ்;லிம்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இந்த அரசை உருவாக்க எனது முழு முஸ்லிம் சமூகமும் அளப்பரிய விலை கொடுத்து அர்ப்பணிப்புச் செய்திருந்தது. வடபகுதிலே 79 பள்ளிவாசல்களில் இறை அழைப்பை மேற்கொள்ள முடியாமல் எல்.ரீ.ரீ.ஈ.யினர் அவற்றை அழித்திருந்தார்கள். எல்லாவகையிலும் முஸ்லிம் சமூகத்தைக் கருவறுக்க எல்லோரும் நினைக்கிறார்கள்.வில்பத்து வனத்திலோ வேறெந்த இடத்திலுமோ முஸ்லிம்கள் அரச காணிகள் ஒரு அங்குலத்தையேனும் அபகரிக்கவில்லை.
இந்த நாட்டை முஸ்லிம்கள் அழிக்கவில்லை. இனக்குழப்பங்களை ஏற்படுத்தவில்லை. நாட்டுக்கெதிராக ஆயுதம் ஏந்தவில்லை. அவ்வாறிருக்கும் போது அபாண்டமாக இந்த சமூகத்தின் மீது வீண்பழி சுமத்தி இந்த சமூகத்தை அழிக்க நினைக்கின்றார்கள்' என்று ரிஷாட் பதியுதீன் மேலும் கூறினார்.
3 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
1 hours ago
2 hours ago