Gavitha / 2015 ஜூன் 18 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையை உடனடியாக மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருமாறு கோரி, நேற்று புதன்கிழமை (17) வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
வைத்தியசாலையில் கட்டப்பட்டுள்ள ஏழு மாடிக்கட்டடம் உடைந்து விழும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதையடுத்து, மேல் மாகாண சபையின் கீழ் உள்ள வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருமாறும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.
சர்வமதத்தலைவர்கள், நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையை பாதுகாக்கும் அமைப்பு, நீர்கொழும்பு வைத்தியசாலை அபிவிருத்தி அமைப்பு, நீர்கொழும்பைச் சேர்ந்த பல்வேறு சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து, இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
சுமார் 4 ஆயிரத்துக்கும் மேலதிகமான மக்கள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், பிரதி அமைச்சர் சுதர்சனி பெர்ணாந்து புள்ளே, மேல் மாகாணசபை அமைச்சர் நிமல் லான்ஸா, மேல் மாகாண சபை உறுப்பினர்களான ரொயிஸ் பெர்ணாந்து, சாபி ரஹீம், நீர்கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் சர்வ மதத்தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
.jpg)

3 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
1 hours ago
2 hours ago