Princiya Dixci / 2015 ஜூலை 23 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

கெத்தாராம மைதானத்தில் இடம்பெற்ற முறுகலையடுத்து ஏற்பட்ட மோதல்களின்போது பொலிஸார் நியாயமற்ற முறையில் நடந்துகொண்டதாகவும் குற்றச்செயல்களில் ஈடுபடாத அப்பாவி முஸ்லிம் இளைஞர்களையே கைது செய்துள்ளதாகவும் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கெத்தாராம ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் இடம்பெற்ற நிகழ்வும் அதற்கு பின்னர் இடம்பெற்ற சம்பவங்களும் கண்டிக்கத்தக்கதாகும்.
மைதானத்தில் இடம்பெற்ற இருவருக்கிடையிலான முறுகலே பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. மைதானத்தில் இருந்த தரப்பினராலேயே பள்ளிவாசலுக்கு கல் எறியப்பட்டுள்ளது. அத்துடன், மைதானத்துக்கு வெளியில் இருந்தவர்களால் விளையாட்டரங்கை நோக்கி கல் எறியப்பட்டுள்ளது. இவர்களை பொலிஸாரால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
ஆனால், இந்த சம்பவத்துடன் தொடர்பற்ற அப்பாவி இளைஞர்கள் இருவரை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் எந்தவிதமான தகராறிலும் ஈடுபடாது கிரிக்கெட்போட்டியை பார்க்கச் சென்றவர்களே. இவர்கள் போட்டியை கண்டுகளித்துவிட்டு வெளியில் வரும்போது அநியாயமாக கைதாகியுள்ளனர்.
எனவே, இது விடயத்தில் சரியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அப்பாவி இளைஞர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

![]()

7 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
2 hours ago