Thipaan / 2015 ஓகஸ்ட் 04 , பி.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
துருக்கியானது இலங்கையுடன் இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பினை வலுப்படுத்துவதற்கு மேற்கொண்டுவரும் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நன்றியினை துருக்கி நாட்டு தூதுவருக்கு தெரிவித்தார்.
அத்தோடு, துருக்கியின் பல கட்டுமான நிறுவனங்கள் இலங்கையில் மேற்கொண்டுவரும் வேலைத்திட்டங்களையும் குறிப்பாக, மன்னாரில் முன்னெடுக்கப்பட்டுவரும் 100 வீடுகள் திட்டத்தினையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் தனது பணிக்காலத்தை முடித்துக்கொண்டு நாடுதிரும்பும் துருக்கியின் தூதுவர் ஸ்கென்டர் கெமால் ஒக்யாயை நேற்று (04) பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியின் உத்தியாகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, துருக்கியினுடைய பல கட்டுமான நிறுவனங்கள், ஐரோப்பிய ஒன்றியம் என்பன இலங்கையில் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களில் பங்கெடுத்துள்ளதை தூதுவர் ஒக்யாய் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, இலங்கையில் பணிபுரிந்தபோது இலங்கை மற்றும் துருக்கிக்கு இடையே இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்கு தூதுவர் ஆற்றிய சேவைகளுக்காக நன்றி தெரிவித்த ஜனாதிபதி, சர்வதேச அரங்கில் இலங்கைக்கு பல சந்தர்பங்களில் துருக்கி உதவி புரிந்துள்ளதையும் நினைவுகூர்ந்தார்.
துருக்கி அரசாங்கத்தின் சார்பாக துருக்கி தூதுவரால் உத்தியோகபூர்வ துருக்கி விஜயம் தொடர்பான அழைப்பும் ஜனாதிபதிக்கு இச்சந்திப்பில் விடுக்கப்பட்டது.
7 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
2 hours ago