Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பாநூ கார்த்திகேசு
நாட்டின் சனத்தொகையில் 52 சதவீதமான பெண்கள் இருக்கின்ற போதும் அவர்களின் அரசியல் பங்களிப்பானது 2.7 சதவீதமாக காணப்படுகின்றது. பெண்களை நம்பி வீட்டுப்பொறுப்பை ஒப்படைக்கும் உங்களால், சமூகப்பொறுப்பை ஒப்படைக்க முடியாதா? என Search for Common Ground, பெண்கள் ஊடகக் கூட்டமைப்பு மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் சங்கம் ஆகியவற்றின் தலைவி குமுதினி சாமுவேல் கேள்வியெழுப்பினார்.
ஊடகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை ஒன்றிணைந்து, 'பெண்களுக்கு வாக்களியுங்கள்' என்னும் தொனிப்பொருளில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (05) நடத்திய கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உலகின் முதலாவது பெண் பிரதமரை கொண்ட நமது நாட்டில், பெண்களுக்கான பிரதிநிதிகள் மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றனர். எமது சமூகம் மற்றும் கலாசாரம் என்பவை இடங்கொடுக்காமையே இதற்கு காரணம். தற்போது நாடாளுமன்றத்தில் 13 பெண் உறுப்பினர்கள் இருக்கின்றனர். எனினும், ஆசிய நாடுகளின் பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்துடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவானது என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான செபாலி கோட்டே ஊகோடவத்த கருத்து தெரிவிக்கையில்,
இது தேர்தல் காலம் ஆகையால், தற்போது ஊடகங்களில் வெளியாகும் வேட்பாளர்களது கருத்துக்களை கண்காணித்தால் கூட அவற்றில் நூற்றுக்கு 95 சதவீதமானவை ஆண் வேட்பாளர்களாகவே இருக்கின்றனர். இம்முறை நடைபெறவிருக்கும் தேர்தலானது சுதந்திர இலங்கையின் 15ஆவது பொதுத்தேர்தல். இத்தேர்தலில் வாக்களிப்பவர்கள் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வண்ணம் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.
33 minute ago
37 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
37 minute ago
44 minute ago