Super User / 2011 ஜூன் 03 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுசித ஆர். பெர்னாண்டோ, ஹுபர்ட் பெரேரா)
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸார் 3 வெவ்வேறு திசைகளிலிருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக குற்றப் புலனாய்வுப் பணியகம் நீர்கொழும்பு நீதவானிடம் இன்று தெரிவித்தனர்.
சுதந்திர வர்த்தக வலய ஊழியரான ரொஷேன் சானக (21) கொல்லப்பட்டமை தொடர்பான விசாரணை தொடர்பாக, சீதுவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதே பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராக்கிய பின் குற்றப் புலனாய்வு பணியக அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
சந்தேக நபர்களான சீதுவை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம். ரட்னாயக்க, சுற்றாடல் பிரிவு பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர்; கே.எல். ரணசிங்க ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதம நீதவான் ஏ.எம்.என். அமரசிங்க உத்தரவிட்டார்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago