Super User / 2011 மே 11 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
போலி அடையாளங்களுடன் காசோலைகளை வழங்கி, 73 லட்சம் ரூபாவை மோசடி செய்தபின் தலைமறைவாகிய ஒருவரை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுப் பணியகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெருவில் வர்த்தக நிலையமொன்றை நடத்திவரும் இவர், போலி அiயாளங்களுடனான காசோலைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியதுடன் அத்தகைய காசோலைகளைப் பயன்படுத்தி பொருட்களையும் கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பிடத்தக்க காலம் இந்நடவடிக்கையை மேற்கொண்ட இந்நபர், பொரல்லஸ்கமுவ, மருதானை, பேராதெனியா ஆகிய பகுதிகளிலுள்ள 3 போலி முகவரிகளையும் வழங்கியுள்ளார்.
ஜயலத் நவரட்ன என அடையாளம் காணப்பட்டுள்ள இந்நபர் தொடர்பாக அறிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர். 011-2422176, 011-2328043, 011-2320141, 011,2320145
27 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago