2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

82,000 ரூபா பெறுமதியான பொருட்களை திருடியவர் கைது

Super User   / 2014 ஜனவரி 22 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.ஷாஜஹான்


நீர்கொழும்பு கந்தவல பிரதேசத்திலுள்ள மின்சார சபையின் களஞ்சியசாலையிலிருந்து 82,000 ரூபா பெறுமதியான பொருட்களை திருடி விற்பனை செய்த சந்தேகநபர் நேற்று கைது செய்துள்ளதுடன் திருடப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

நீpர்கொழும்பு, தளுவகொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான குருகுல சூரிய துசித்த சுரேந்ர என்ற  போதைப் பொருளுக்கு அடிமையான நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என நீர்கொழும்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X