2021 ஜூன் 16, புதன்கிழமை

'அகிலதாஸின் இராஜினாமா பரிசீலனை செய்யப்படவேண்டும்'

Gavitha   / 2015 நவம்பர் 20 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினராகவிருந்து கட்டாயத்தின்; அடிப்படையில் பதவி விலகியதாகக் கூறப்படும் சிவக்கொழுந்து அகிலதாஸின் இராஜினாமா கடிதம், பரிசீலனை செய்யப்பட்ட பின்னரே முடிவெடுக்கப்பட்டு தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பப்படும் என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (19) நடைபெற்ற போது, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, கட்டாயப்படுத்தப்பட்டு பதவி விலக்கப்பட்ட அகிலதாஸினுடைய விடயம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஆளுங்கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ உறுப்பினர் ஒருவர் கொலை மிரட்டல் விடுவிக்கப்பட்டு, பதவி விலகியமை கண்டிக்கத்தக்கது. இதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உறுப்பினர்கள் தமது கருத்தை முன்வைத்தனர்.

கொலை மிரட்டல் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவைத்தலைவர், அகிலதாஸ் அனுப்பிய இராஜினாமா கடிதத்தில் இறப்பர் முத்திரை எதுவும் பதியப்படாமல் இருப்பதாகவும் அத்துடன், அந்த இராஜினாமா முன்வந்து கொடுக்கப்படவில்லையெனவும் குறிப்பிட்டார்.

இதனால் அதனை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்ப முடியாது என்றும் இந்த இராஜினாமா கடிதம் பரிசீலனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .