2021 ஜூன் 14, திங்கட்கிழமை

புதிய நிர்வாகிகள் தெரிவு

Sudharshini   / 2015 நவம்பர் 28 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.தபேந்திரன்

வட மாகாண சமூக சேவைகள் உத்தியோகத்தர் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை (27) கைதடியிலுள்ள திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில்  புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக, தலைவர் - தங்கவடிவேல் கிருபாகரன், செயலாளர் - வேதநாயகம் தபேந்திரன், பொருளாளர் - விநாயகமூர்த்தி சண்முகநாதன், உப தலைவர் - திருமதி.யூலியா  ஜேசுதாஸ் மரியப்பிள்ளை, உபசெயலாளர் - நாகராசா ராஜமனோகரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

சங்கத்தின் நடவடிக்கைகளை மாவட்டங்கள் ரீதியாக ஒருங்கிணைப்பதற்காக மாவட்ட இணைப்பாளர்களும் இதன்போது தெரிவு செய்யப்பட்டனர்.

இதில் யாழ். மாவட்டம் - வே.சிவராஜா, கிளிநொச்சி மாவட்டம் - சு.ஜெயானந்தராஜா, முல்லைத்தீவு மாவட்டம் -  கே.குணசிங்கம், வவுனியா மாவட்டம் - திருமதி.வி.பிரேமநிதி, மன்னார் மாவட்டம் - எஸ்.ரி.சந்திரபோஸ்  ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

வட மாகாண சமூக சேவைகள் உத்தியோகஸ்தர் நிகழ்ச்சித் திட்ட உதவியாளர் சங்கமாக இருந்த தொழிற்சங்கம் தற்போது சமூக சேவைகள் உத்தியோகத்தர்களை மட்டும் கொண்ட தொழிற்சங்கமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .