2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

பாரவூர்தி சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானம்

Niroshini   / 2016 மார்ச் 02 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

மகேஸ்வரி நிதியத்தால் தங்களுக்கு வழங்க வேண்டிய 10 மில்லியன் ரூபாய் பணம் இன்னமும் தராமல் இழுத்தடிக்கப்படுவதைக் கண்டித்து யாழ்.மாவட்ட பாரவூர்திகள் உரிமையாளர் சங்கத்தால் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக சங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகேஸ்வரி நிதியத்துக்கு மணல் ஏற்றியிறக்குவதற்காக பாரவூர்தி உரிமையாளர்கள் வழங்கிய 5,000 ரூபாய் அங்கத்துவ வைப்புப் பணம் மற்றும் ஒவ்வொரு முறையும் மணல் ஏற்றியிறக்கும் போது வழங்கிய 300 ரூபாய் சேமநிதி என மொத்தமாக 10 மில்லியன் ரூபாய் நிதியை திரும்பத் தரக்கோரி பாரவூர்தி உரிமையாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளனர்.

மேலும், யாழ்.மாவட்டத்தில் மணல் ஏற்றியிறக்குவதற்கு பாரவூர்தி சங்க லொறிகளை பயன்படுவதற்கு கனிப்பொருள் கூட்டுத்தாபனம் ஒப்புதல் அளித்து ஒன்றரை மாதம் கழிந்தும் அதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காததைக் கண்டித்தும், பாரவூர்திகளின் மேல் பகுதியில் அதிகளவு பொருட்களை ஏற்றுவதை தடுப்பதற்கு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டும் அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படாமையைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X