Gavitha / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்
கொக்குவில் பகுதியில் வாள்கள், பொல்லுகளுடன் கைது செய்யப்பட்ட 5 பேர் கொண்ட ரௌவுடிக் கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களில், ஒரு மோட்டார் சைக்கிள், அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி யூ.கே.வூட்லர் தெரிவித்தார்.
மற்றுமொரு நபரிடமிருந்து குறித்த ரௌவுடிக் கும்பல், இரவலாக வாங்கிக் கொண்டு சென்ற மோட்டார் சைக்கிளே, அதன் உரிமையாளரிடம் இவ்வாறு மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரின் அலைபேசியிலிருந்து, பாடசாலை மாணவிகளின் புகைப்படங்களும் ஆபாச வீடியோக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், சந்தேகநபர்களின் வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், ஒரு சந்தேகநபரது வீட்டின் மலசலகூடத்துக்கு மேற்பகுதியிலிருந்து வாள்கள் மீட்கப்பட்டதாகவும் யூ.கே.வூட்லர் கூறினார்.
சந்தேகநபர்கள் ஐவரும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி வரையில் யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமாரால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
2 hours ago
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
24 Jan 2026