Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஓகஸ்ட் 30 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா,தாஸ், சங்கவி)
இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒளிமயமான சுபீட்ச வாழ்வை ஏற்படுத்துவதற்கும் அவர்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கும் இந்தியா எப்போதும் தயாராகவே உள்ளது என யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்தார்.
ழ். நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பொதுமக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பிலும் நிருபமா ராவ் கலந்துகொண்டார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"நடந்து முடிந்த கசப்பான அனுபவங்களை மறந்து விட்டு எதிர்காலத்தை வளமானதாக மாற்ற அனைவரும் இணைய வேண்டும். இலங்கையின் நீண்ட கால நட்புறவு நாடான இந்தியா எப்போதும் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இதய சுத்தியோடு பெரும்பங்காற்றத் தயாராக இருக்கிறது" எனவும் அவர் கூறினார்.
இன்று மாலை 4 மணியளவில் யாழ். துரையப்பா விளையாட்டரங்கிற்கு ஹெலிகொப்டரில் வந்திறங்கிய அவரை யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார், பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்காக இந்திய அரசினால் வழங்கப்பட்ட கூரைத் தகடுகள், கட்டடப் பொருள்கள் என்பவற்றை அவர் வழங்கி வைத்தார்.
அதனையடுத்து, யாழ். மாவட்டச் செயலகத்துக்குச் சென்ற நிருபமா ராவ் அங்கு அரச அதிபர், மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலர்கள் ஆகியோரோடு கலந்துரையாடினார்.
இதில் மீள்குடியேற்றம் தொடர்பான முன்னேற்றங்கள், குடாநாட்டுக்குத் தேவையான அபிவிருத்தித் திட்டங்கள் என்பன பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வுகளில், இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமாராவுடன், இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்த், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவாசம் ஆகியோரும் பங்குபற்றினர்.
34 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
58 minute ago