2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

மீளக்குடியேற்றுமாறு இராமாவில் முகாம் மக்கள் கோரிக்கை

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 02 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சரண்யா)

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகத் தம்மை சொந்த இடங்களில் மீளக்குடியேற்றுமாறு இராமாவில் நலன்புரிநிலையத்தில் தங்கியுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியில் அமைந்துள்ள இராமாவில் நலன்புரி நிலையத்தில் 702 குடும்பங்களைச் சேர்ந்த 2,272 பேர் தங்கியுள்ளனர். இவர்களில் அனேகமானவர்கள் வடமராட்சி கிழக்குப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்டவர்கள். இதுவரையும் இவர்கள் மீளக்குடியேறுவதற்கான அனுமதி கிடைக்காததால் 15 மாதங்களுக்கும் மேலாக இவர்கள் நலன்புரி நிலையத்திலேயே தங்கியுள்ளனர்.

நலன்புரி நிலையத்தில் பல்வேறு இன்னல்களுக்கும் அவர்கள் முகங்கொடுத்து வருகின்றனர். அண்மையில் பெய்த மழையால் இந்த நலன்புரி நிலையத்தில் வெள்ளம் புகுந்து மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகினர். இந்நிலையில், மாரிகாலம் தொடங்கினால் இராமாவில் நலன்புரிநிலைய மக்கள் இன்னும் அதிக பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.

இதேவேளை, வடமராட்சி கிழக்கில் மக்களை மீளக்குடியமர்த்த யாழ். மாவட்டக் கட்டளைத்தளபதி -ஹத்துருசிங்க, யாழ்.அரச அதிபரிடம் அனுமதி வழங்கியிருந்தார்.

எனவே, தம்மை விரைவில் மீளக்குடியேற்றி மழைக்கால இன்னல்களில் இருந்து தம்மைப் பாதுகாக்குமாறு இராமாவில் நலன்புரிநிலைய மக்கள் கோரியுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .