2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

அடிகாயங்களுடன் மீட்கப்பட்டவர் வைத்தியசாலையில்

Super User   / 2010 செப்டெம்பர் 09 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தாஸ்)

தென்மராட்சி மட்டுவில் பகுதியில் அடிகாயங்களுடன் பற்றை மறைவில் இருந்து பொதுமக்களால் மீட்கப்பட்ட நபர் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கச்சாய் சாவகச்சேரியைச் சேர்ந்த சின்னத்தம்பி ஜெயசிங்கம் (வயது40) என்பவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாகத் தெரியவந்துள்ளதாவது:

நேற்று இரவு 8 மணியளவில் கச்சாய் சாவகச்சேரியைச் சேர்ந்த சின்னத்தம்பி ஜெயசிங்கம் என்பவரது வீட்டுக்குச் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் தமது உழவு இயந்திரம் பழுதடைந்துவிட்டதாகவும் அதனைத் திருத்தவேண்டும் என்றும் கூறி இவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் மட்டுவில் பகுதியில் உள்ள பற்றைமறைவினுள் முனகல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் இவரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர் என்று கூறப்பட்டது.

இந்த விடயம் தொடர்பாகச் சாவகச்சேரிப் பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .