2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

மீள்குடியேறிய மக்களுக்கு உதவிப்பொருட்கள்

Super User   / 2010 செப்டெம்பர் 11 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (கர்ணன்)

வடமராட்சி கிழக்குப் பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கு நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை உதவிப்பொருள்கள் வழங்கப்படவுள்ளன.

சிமெந்துப் பைகள், கூரைத் தகரம் விவசாய உபகரணங்கள் ஆகியவற்றுடன் 5 ஆயிரம் ரூபா பணமும் வழங்கப்படவுள்ளது.

இராமாவில் நலன்புரி நிலையத்தில் இருந்து கடந்த 9 ஆம் திகதி மீள்குடியேற்றத்துக்கென அழைத்துச் செல்லப்பட்ட 353 குடும்பங்களைச் சேர்ந்த 1072 பேர் தற்காலிகமாக 5 பொது இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

செம்பியன்பற்று அ.த.க. பாடசாலை, மருதங்கேணி ப.நோ.கூ.ச., தாளையடி தேவாலயம், உடுத்துறை ம.வி., ஆழியவளை சி.சி.த.க.பாடசாலை ஆகிய இடங்களிலேயே இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான உதவிப் பொருள்கள் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டதும் அவர்கள் தமது சொந்தக் காணிகளுக்குச் சென்று துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .