Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 12 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
விழாக்கள் வெறும் கேளிக்கைகளாக மட்டும் அமையக்கூடாது. பாரம்பரிய கலை கலாச்சார பண்பாடுகளைப் பேணுபவையாகவும் பாதுகாப்பவையாகவும் அமைய வேண்டும்.
திருமறைக்கலாமன்றத்தின் பணிப்பாளர் அருட்தந்தை மரியசேவியர் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு ஒன்று யாழ்ப்பாணம் டேவிற் வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலா மன்றத்தின் கலைத்தூது நிலையத்தில் நேற்று நண்பகல் இடம்பெற்றது. இதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் தெரிவித்ததாவது:
இன்று ஆலயங்களிலும் கூட பெரும் தொகையான பணச்செலவில் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.மக்கள் துன்ப துயரங்களுக்குள் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். ஆலயங்களில் செலவிடப்படும் பணத்தில் ஒரு பகுதியையேனும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கஸ்டத்தில் வாழும் மக்களுக்காக செலவிடமுன்வர வேண்டியது அவசியமாகும்.
இன்று மக்களுடைய துன்ப துயரங்களை எடுத்துக் கூற மதத் தலைவர்களும் இல்லை சமூகத் தலைவர்களும் இல்லை. இந்த நிலைமையே தமிழ் மக்களிடையே இன்று காணப்படுகின்றது. – என்றார்.
40 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
1 hours ago