2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

யாழில் பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை

Menaka Mookandi   / 2011 மார்ச் 26 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ்ப்பாணத்தில் பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கான தைத்த சீருடைகள் சிலவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீருடைக்கான துணிகள் யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிடம் இன்று காலை கையளிக்கப்பட்டன.

சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான இந்த சீருடைகளை சீகல் ரெசிடன்சீஸ் தனியார் நிறுவனத்தின் தலைவரும் பிரபல பொறியியலாளருமான எஸ்.கிருபாகரன் தனது தனிப்பட்ட செலவில் வழங்கியுள்ளார்.

சுமார் ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான இந்த சீருடைகள் வெகு விரையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர் குழுக்களுக்குப் போய்ச் சேரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  Pix By :- Kushan Pathiraja


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .