2021 ஜூன் 25, வெள்ளிக்கிழமை

யாழ். நகரின் சுத்திகரிப்புப் பணியை தனியாரிடம் ஒப்படைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 07 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (கவிசுகி)

யாழ். நகரப் பகுதியை ஏனைய நகரங்களை விட சுத்தமாக வைத்திருப்பதற்காக யாழ். மாநாகரசபையின் சுத்திகரிப்புப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கவுள்ளதாக யாழ். மாநகரசபை முதல்வர் திருமதி பற்குணராஜா யோகேஸ்வரி இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாணத்திற்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வந்து, செல்வதால் யாழ். நகரை சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாண பட்டிணத்தை தூய்மையாகவும் அழகாகவும் வைத்திருப்பதற்கு சுத்திகரிப்புப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பது சிறந்ததென யாழ். மாநகரசபை உறுப்பினர்கள் கருதியமையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இரவு, பகலாக சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு யாழ். மாநகரசபையிடம் ஆளணிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக யாழ். நகரப் பகுதியை சுத்தமாக வைத்திருப்பதற்கு சுத்திகரிப்புப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .