2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

வடமராட்சி மீனவக் குடும்பங்களுக்கு பாசிக் நிறுவனத்தின் உதவிகள்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 08 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வடமராட்சி கிழக்கில் 56 மீனவக் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தனியார் நிறுவனமான பாசிக் நிறுவனத்தினரால் கட்டுமரங்கள், வலைகள் மற்றும் கடல்சார் உபகரணங்கள் இந்த மாதம் வழங்கி வைக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள்  வழங்கப்படவுள்ளன. மீனவர்கள் தங்களது தொழிலை மேம்படுத்துவதற்கான அனைத்து உதவிகளையும்; பாசிக் நிறுவனம் செய்து கொடுப்பதற்கு முன்வந்துள்ளதாகவும் கடற்றொழில் நீரியல்வளத்; திணைக்களம் தெரிவித்துள்ளது

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களினால் வடமராட்சி மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் எதிர்கால வாழ்வியலுக்கு உறுதுணையாக பாசிக் நிறுவனம் இருக்குமென கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .